COVID-19 Relief 2021 - Dry food supplies for Upcountry children homes

Beneficiary
Project Date
2021-09-01
Type of Assistance
-
Description

LetUsHelpNow Foundation provided dry food to nine children homes and one elders home in Upcountry to assist them during the covid-19 lockdown. 

The homes care for 241 children and 13 elders.  Due to lockdown, we were not able to purchase and distribute the food ourselves.  Instead, we obtained a price list of goods from vendors who distribute to these homes and deposited funds to homes to cover one month's food expenses.  

This month’s project was proposed by LetUsHelpNow Foundation director late Prabbaharan Selvarajah.  We continue our work in his memory. 

The budget for the July projects was LKR 991,835.  The funds were donated by 108 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. We obtain a minimum two quotes for purchases, and seek to deliver when possible.  The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

 

மலையகத்திலுள்ள ஒன்பது சிறுவர் இல்லங்களுக்கும் ஒரு மூத்தோர் இல்லத்திற்க்குமான  கோவிட்19 நிவாரண உதவியாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கல்.

இவ்வில்லங்களில் ஏறத்தாள இருநூற்றி நாற்பத்தியொரு சிறுவர்களும் பதின்மூன்று மூத்தோர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போது அமுலிலுள்ள முடக்கு நிலை காரணமாக எம்மால் பொருட்களை வாங்கி வழங்குதல் கடினமாக இருந்தமையால், இல்லங்கள் தமக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான பொருட்களை அவர்கள் வழமையாக வாங்கும் முகவர்களிடமிருந்து ஒரு விலைப்பட்டியலை பெற்று அதற்கான நிதியினை இல்ல வங்கிக்கணக்குகளில் வைப்பிலிட்டோம்.

இம்மாத செயற்திட்டம்  அண்மையில் எம்மைவிட்டகன்ற அறம் செய்வோம் அறக்கட்டளையின் இயக்குனர் பிரபாகரன் செல்வராஜா அவர்களினால் முன்மொழியப்பட்ட திட்டமாகும். அறம் செய்வோம் அறக்கட்டளையின் அறப்பணிகள் வாயிலாக பிரபாகரன் செல்வராஜா  அவர்களின் நினைவுகள் என்றும் எம்மோடிருப்பதாகுக.  

இம்மாத செயற்றிட்ட நிதியான ரூபா 991,835 அறம் செய்வோம் அறக்கட்டளையின் கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் வாழும் 108 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 914,335.54
Project Status
Completed