Supporting Thalam Youth Organization in Trincomalee

Beneficiary
Beneficiary
Project Date
2025-09-26
Type of Assistance
Education and Capacity Building - Student Mentorship
Description

In addition to our ongoing work with care homes in the North, East, and Upcountry, we also collaborate with community agencies and networks that serve marginalized groups in these regions.

Thalam is a youth-led voluntary community organization based in Trincomalee, active for the past seven years. It strives to build a brighter future by nurturing skills, connecting young people with educational and employment opportunities, and fostering a supportive environment for growth. Its mission is to guide youth toward meaningful opportunities while strengthening the social fabric around them.

Within the vicinity of Thalam’s learning center are six children’s homes. By strengthening Thalam as an institution, we can ensure that these homes—particularly students who are either continuing or unable to pursue higher education—receive guidance and support, alongside other underprivileged youth in Trincomalee.

In close consultation with Thalam, we have shaped this month’s action plan into two focused projects:

Transforming Thalam’s Training Spaces

The Thalam Learning Center is a vital hub where students and youth gather every day to study, connect, and grow together. However, its facilities and furnishings need to be improved to better serve the youth.  To create a more welcoming and functional environment without taking up excess space, the plan includes: foldable tables and chairs, a water purification unit, whiteboards, bookshelves, a recreation corner with games, and enhanced internet access.

Funding for the Keetrugal Program

The Keetrugal program offers alternative learning pathways for students unable to pursue advanced university studies. It equips participants with practical skills in office administration, entrepreneurial thinking, and real workplace experience. With LetUsHelpNow Foundation’s support, the program will prioritize students from nearby care homes while also welcoming underprivileged youth from across Trincomalee. A total of 25 students will be enrolled in the upcoming batch.

As part of the intake process, Thalam volunteers will visit six nearby care homes to meet students at both ordinary and advanced levels. Suitable candidates will be enrolled, while additional data will be gathered on other students’ needs and circumstances. These insights will help shape the LetUsHelpNow Foundation’s future initiatives.

அறம் செய்வோம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கு மலையக காப்பகங்களுடன் மாத்திரமன்றி இப்பகுதிகளில் விளிம்பு நிலை மக்கள் நலன் சார்ந்து இயங்கி வரும் தன்னார்வ நிறுவனங்களுடனும்  சமூக பணிகளை தொடர்ந்து வருகிறது

தளம் திருகோணமலையை மையமாக கொண்ட கடந்த 7 வருடங்களாக இயங்கி வரும் ஆளுமையுடைய தன்னார்வ இளைஞர் சமூக அமைப்பாகும். திறன் வளர்ப்பு, திறமை வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான செழிப்பான வாழ்க்கைச் சூழலை பேணுவதன் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செயற்பட்டு வருகிறார்கள். முக்கியமான வாய்ப்புகளை நோக்கி இளைஞர்களை வழி நடத்தி, ஒரு ஆதரவான சமூகத்தை அடைய முயல்கிறார்கள்.

திருகோணமலையில் உள்ள ஆறு சிறுவர் காப்பகங்கள் இவர்களின் கற்கை நிலைய சுற்று வட்டாரத்தில் உள்ளன. தளம் நிறுவனத்தினை பலப்படுத்துவதன் மூலம் இக்காப்பகங்களிலுள்ள சிறார்களை குறிப்பாக உயர்தர கல்வியை தொடரவுள்ள மற்றும் உயர்தர கல்வியை தொடர இயாலாத சிறார்களை வழிகாட்டவும் திருகோணமலையில் உள்ள நலிவடைந்த மாணவர்களை வழி நடத்தவும் உதவும்.

தளம் நிறுவனத்துடனான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் இம்மாத செயல் திட்டத்தினை இரு திட்டங்களாக வடிவமைத்துள்ளோம்.

தளம் கற்றல் நிலையத்ததை மேம்படுத்தல்

தளம் கற்கை நிலையமானது நாளாந்தம் மாணவர்களும், இளைஞர்களும் சந்திக்கின்ற, கற்கின்ற ஒரு பொது இடமாகும். இங்குள்ள தளபாடங்கள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளன. இதற்கான பல தேவைகளுக்கு பயன்படுகின்ற வகையிலும் இடத்தினை பெரிதும் எடுத்துக்கொள்ளாத வகையில் கழட்டி வைக்க கூடிய வகையில் மேசைகள் , கதிரைகள், நீர் சுத்திகரிக்கும் சிறு இயந்திரம், வெண் பலகைகள்,  விளையாட்டுப் பொருட்களுடன் அமைந்த பொழுதுபோக்கு பகுதி அமைத்தல்,   புத்தக தட்டுக்கள், நிலத்தில் இருந்து கலந்தோசிக்க கூடிய சிறு பகுதி அமைத்தல்,  இணைய வசதியை வலுவுட்டல்

தளம் நிறுவனத்தின் ஒரு கற்கை நெறியான கீற்றுக்கள் என்ற  மூன்று மாத பாடத்திட்டத்திற்கு நிதியுதவி  . 

மேற்படிப்பு செயற்பாட்டினை தொடர இயலாத சிறார்களுக்கு, அவர்களின் அடுத்த கட்ட வாழ்விற்கு இட்டுச்செல்லும் விதமான கற்றல் நடவடிக்கையும், ஒரு மாத செயல்முறைத் திட்டமும். காப்பக மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்தலும் திருகோணமலையிலுள்ள வசதி வாய்ப்புக்கள் அற்ற மாணவர்களை உள்வாங்குவதும் இத்திட்டத்தின் குறிக்கோளாகும். இத்திட்டத்தில் 25 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இதன் முன்னோடித்திட்டமாக அருகாமையிலுள்ள ஆறு சிறுவர் காப்பகங்களுக்கு தளத்தின் தன்னார்வலர்கள் சென்று அங்குள்ள  சாதாரணதர, உயத்தர மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இவர்களில் இப்பாடத்திட்டத்திற்கு தகுந்த மாணவர்களை உள்வாங்குவதும் மற்றயை மாணவர்களின் தற்போதைய நிலைபற்றியும் தரவுகளை சேகரிக்கவுள்ளனர். இத்தரவுகள் எங்களின் எதிர்கால திட்டங்களுக்கு உதவும்.

Budget
Rs 700,000.00
Project Status
In Progress