SEEDS Livelihood Development Project
Need Assessment
Vanni Association for Visually Handicapped (Kilinochchi) was established in 2013 to assist people who have lost their eyesight as a result of years of war in North and East of Sri Lanka. Currently, it consists of 278 member families. From these families, there are 200 children, including three visually impaired children. The majority of these members are former fighters who lost their sight due to the war.
These beneficiaries are unable to obtain loans from banks or other sources due to their difficult economic situation. They lack any assets, and they don’t have the backing of any guarantors to help them obtain loans. At the same time, there is a need for improvement in the approaches of welfare programs that provide livelihood assistance to such beneficiaries. It is a continuous effort to find sponsors who can provide such assistance. After providing aid, monitoring whether the funds are being used properly and ensuring accountability is also a challenge. We believe that providing interest-free loans with proper guidance for livelihood through a grassroots organization directly connected to the beneficiaries will help solve the above noted challenges
The "Vidhaigal" Livelihood Improvement Project is a pilot program to help members of the Vanni Association for the Visually Handicapped develop lasting economic self-reliance. The program provides interest-free loans, business guidance, and continuous support to help them develop self-employment initiatives.
Goal
To equip the members of the Vanni Association for the Visually Handicapped with the funding, mentorship, and resources they need to build sustainable, self-reliant livelihoods.
Objectives
To identify self-employment opportunities suitable for each individual's interests and skills.
To provide interest-free loans ranging from Rs. 100,000 to Rs. 200,000.
To support the success of the project by providing continuous guidance, support and business advice.
To create a framework for recovering the loan amount within 20 months.
To establish a monitoring system to continuously track and report on the progress of the project.
Project Activities
Beneficiary Selection
Collecting applications for the project.
Evaluation by the association's management committee based on the beneficiary's need, commitment, business involvement and capacity, loan repayment capacity, and family needs.
Funding
Providing funds to selected beneficiaries after verifying the necessary documents. This interest-free loan can range from Rs. 100,000 to Rs. 200,000.
Monitoring and Guidance
Providing advice by meeting with beneficiaries monthly or as needed through the association's officers.
The association's officers will monitor the beneficiaries' business progress and financial usage and submit a report to the association.
Loan Recovery
Monthly installments will be determined by both parties so that the full amount is repaid within 20 months. The association's officers will carry out the necessary follow-ups.
Funding Plan
As the first phase of this project, 20 member beneficiaries have been identified. To help all of them at the same time, approximately Rs. 4 million is needed
விதைகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்: வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்
திட்டத்தின் தேவை
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் (கிளிநொச்சி), போரால் பாதிக்கப்பட்ட, குறிப்பாக விழிப்புலன் குறைபாடுடைய 278 வடக்கு கிழக்கு மாகாண பயனாளி குடும்பங்களை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது. இதில் இவர்களது பாடசாலை செல்லும் 200 சிறார்களும் அடங்குவர். இச்சிறார்களில் 3 சிறார்கள் விழிப்புலன் குறைபாடுடையவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் போரால் பார்வையிழந்த முன்னாள் போராளிகள் ஆவார்கள்.
இந்தப் பயனாளிகள் தங்கள் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்குத் தேவையான கடன்களை வங்கிகளிடம் இருந்தோ அல்லது பிற வழிகளிலோ வட்டிக்குத் தானும் பெற முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதே சமயம் இத்தகைய பயனாளிகளுக்கான வாழ்வாதர உதவிகளை வழங்கும் நலத்திட்ட அணுகுமுறைகளிலும் மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. இத்தகைய உதவிகளை வழங்கக் கூடிய புரவலர்களை தொடர்ச்சியாக தேடவேண்டியுள்ளது. உதவிகளை வழங்கிய பின்பு, நிதிகள் சரிவர பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து பொறுப்புக் கூறுதலும் சவாலாக உள்ளது. வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான தகுந்த வழிகாட்டல்களுடன் வட்டியற்ற கடனை ஒர் அமைப்பின் மூலம் வழங்குவது மேற்சுட்டப்பட்ட சவால்களைத் தீர்க்க உதவும் என்று நம்புகிறோம்.
விதைகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் என்பது வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களுக்கு நிரந்தர தொடர்ச்சியான நல்வாழ்விற்கான அவரவர் இயல்புக்கு ஏற்ற சுயதொழில் முயற்ச்சிகளை தொடங்க வட்டியற்ற கடனையும் தொழில் முயற்ச்சிக்கான வழிகாட்டல்களையும் தொடர் கண்காணிப்புகளையும் வழங்கும் ஒரு முன்னோடித் திட்டம் ஆகும்.
இலக்கு
வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார தற்சார்பு நிலையை உருவாக்கல்.
நோக்கங்கள்
விழிப்புலன் குறைபாடுள்ள நபர்களின் தனிப்பட்ட திறன்களுக்கு ஏற்ற சுயதொழில்களை அடையாளம் காணுதல்.
ரூ. 100,000 முதல் ரூ. 200,000 வரையிலான வட்டியற்ற கடன்களை வழங்குதல்.
தொடர்ச்சியான வழிகாட்டல் மற்றும் தொழில் ஆலோசனை வழங்குவதன் மூலம் திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருத்தல்.
கடன் தொகையை 20 மாதங்களுக்குள் மீண்டும் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குதல்.
திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அமைப்பை நிறுவுதல்.
திட்டச் செயற்பாடுகள்
பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தல்
திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சேகரித்தல்.
சங்கத்தின் முகாமைத்துவக் குழுவால் பயனாளிகளின் தேவை, தொழில் ஈடுபாடு, மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன், குடும்பத் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தல்.
நிதி வழங்குதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தேவையான ஆவணங்களை சரிபார்த்த பிறகு நிதி வழங்குதல். இந்த வட்டியற்ற கடனானது ரூ. 100,000 முதல் ரூ. 200,000 வரை அமையலாம்.
கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல்
சங்கத்தில் பணியாற்றும் அலுவலகர்கள் மூலம் மாதாந்த அல்லது தேவைக்கேற்ப பயனாளிகளை சந்தித்து ஆலோசனை வழங்குதல்.
சங்கத்தின் அலுவலர்கள் பயன்ர்களின் தொழில் முன்னேற்றம் மற்றும் நிதிப் பயன்பாட்டை கண்காணித்து சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
கடன் திரும்பப் பெறுதல்
முழுத்தொகையும் 20 மாத்திற்க்குள் மீளளிக்கப்படுமாறு மாதாந்த தொகைகள் இரு தரப்பினராலும் நிர்ணயிக்கப்படும். அதற்குத் தேவையான பின் தொடர்தல்களை சங்க அலுவலர்கள் மேற்கொள்ளுவார்கள்.