Akal Award 2023 - Miss. Vimala Nadaraja
Miss. Vimala Nadaraja is an exemplary individual among us, who dedicated her life to support and care for the vulnerable members of our community.
Born in Jaffna, she completed a degree in chemistry in India. In 1971, she joined the civil administration in Jaffna. She progressed through various roles including development officer and plan implementation officer. In 1977, she was transferred to Trincomalee. In Trincomalee, she stayed in a room for teachers at the Sri Shanmuga home. Thus began her more than 45 years of journey with that school. She first started assisting the home’s manager as a supervisor.
She dedicated most of her free time to teaching the children at the care home. In 1984, she was entrusted with the management and trusteeship of the Sri Shanmuga home. After about 40 years of service in those roles, she retired in 2023. Yet, she continues to contribute to the role of a finance manager.
Her thoughts, time, and love revolve around the children’s education, health, and life. Many today. Over the past forty years, many children she guided have become graduates, professionals, civil servants, and humanitarians, serving the wider community. She considers Sri Shanmuga as her own home. Vimala Nadaraja donated the home she built to a woman who worked with her for a long time. She facilitated that woman’s marriage and transformed her life.
According to those close to her, Vimala Nadaraja never talks about herself, her siblings, or her family. She always thinks about the development of the children. This selfless community leader is the first recipient of the LetUsHelpNow Foundation’s Akal Award. We are happy to recognize and celebrate Vimala Nadaraja.
Miss. Vimala Nadaraja has dedicated over 45 years of her life to improving the lives of children, as a teacher, supervisor of Sri Shanmuga homes and as a community leader.
செல்வி விமலா நடராஜா
கடந்த 45 ஆண்டுகளாக ஆதரவற்ற சிறுவர்களை அரவணைத்து கல்வியூட்டி அவர்களின் வாழ்வை நல்வழிப்படுத்துவதற்காக தம் வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்த பேருள்ளம். இந்த அறச்செயைலையே வாழ்க்கையாக வாழமுடியும் என்பதற்கு எம்மிடையே ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் செல்வி விமலா நடராஜா அவர்கள்.
1944 மே 19ம் திகதி யாழ்ப்பாணம், புலோலி மேற்க்கில் திரு திருமதி நடராஜா தம்பதிகளுக்கு மகளாக பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை வட இந்து மகளிர் கல்லூரியில் கற்றார். இவர் இந்தியாவில் வேதியியல் இளநிலை பட்டப்படிப்பு பெற்று 1971 ம் ஆண்டு இளநிலை உதவியாளராக அரசு பணியில் இணைந்தார். படிப்படியாக அபிவிருத்தி உதவியாளர், திட்ட நிறைவேற்று அலுவலகர் என்று பதவி உயர்வு பெற்றார்.
1977 ம் ஆண்டு பணிநிமித்தம் இடமாற்றம் பெற்று திருகோணமலைக்கு வந்து தனது கடமைகளை மேற்கொள்வதற்காக சண்முகா இல்லத்தில் இருந்த ஆசிரியர்களுக்கான ஓர் அறையில் தங்கியிருந்தார். தனது ஓய்வு நேரங்களில் விடுதியின் முகாமையாளருக்கு உதவியாக இல்லத்தினை மேற்பார்வை செய்துவந்ததுடன், இல்ல சிறார்களுடன் தனது நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தருவதிலும் முழுமையாக ஈடுபட்டார் அன்றில் இருந்து சண்முகா இல்லங்களூடான அவரது வாழ் நாள் பயணம் தொடங்கியது.
1984ல் ஆரம்பிக்கப்பட்ட சண்முகா நம்பிக்கைச் சபையின் செயலாளராகவும் பாதுகாவலர் மற்றும் அறங்காவலராகவும் சண்முகா இல்ல முகாமையாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். 1991 ல் சண்முகா ஆண்கள் இல்லம் தனியாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சண்முகா பெண்கள் இல்ல முகாமையாளராக முழுமையாக பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று வரை தனது வாழ்நாளினை சண்முகா பெண்கள் இல்லத்திலேயே முழுநேரமாக செலவழித்து வருகிறார்.
2022 ம் ஆண்டு இறுதியில் இல்ல முகாமையாளர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றாலும், தொடர்ந்தும் இல்ல ஆலோசகராக இன்றும் தொடர்கிறார்.
செல்வி விமலா நடராஜா அவர்களது சிந்தனை நேரம் அன்பு எல்லாம் அந்த இல்ல சிறார்களின் கல்வி நலம், நல்வாழ்வு பற்றிச் சுற்றியே அமைகின்றன. கல்வி ஒன்றே இச் சிறுவர்களின் வாழ்வை மேம்படுத்தும் என்பதில் அசராத நம்பிக்கை உள்ளவர். அதற்காக அயராது உழைப்பவர். கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர் வழிகாட்டிய பல சிறுவர் சிறுமியர் பட்டதாரிகளாகவும், துறை வல்லுனர்களாகவும் அரசாங்க அலுவலர்களாகவும் சமூகத்துக்கு பங்களிப்பு வழங்குகிறார்கள். அத்துடன் ஆதரவற்ற சிறுவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்கால நலனுக்காக மணம் செய்துவித்து புது வாழ்வு தொடங்கவும் வித்திட்டு வந்துள்ளார். அத்துடன் தனது சொந்த உழைப்பில் கட்டிய வீட்டை இவ்வில்லத்தில் நீண்டகாலமாக தன்னலமில்லாமல் பணியாற்றிய ஓர் பெண்ணுக்கு கொடையாக அளித்து அவருக்கு மணமுடித்து வைத்து அவரது வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ காரணமாகவும் இருந்துள்ளார்.
45 ஆண்டுகளுக்கு மேலாக இலைமறை காயாக ஆதரவற்ற சிறுவர்களை அரவணைத்து அவர்களி்ன் வாழ்வை நல்வழிப்படுத்திய தன்னலமற்ற நல் உள்ளத்தை அறம் செய்வோம் அறக்கட்டளை கௌரவித்து கொண்டாடி மகிழ்ச்சி கொள்கின்றது.