Agriculture Projects: Supporting Vanni Association for the Visually Handicapped

Beneficiary
Project Date
2025-06-15
Type of Assistance
Supporting Sustainability - Home Gardening
Description

Vanni Association for the Visually Handicapped, established in 2013 in Kilinochchi, supports 278 beneficiary families from the Northern and Eastern Provinces affected by war, particularly those who are visually impaired. This includes 200 school-going children, 3 of whom are visually impaired. This month's project aims to engage them in agricultural projects and support small-scale livelihood initiatives. 

There are two components to this month's project.  First, chili cultivation on half an acre of land.  Second, distribution of chili seedlings to beneficiaries interested in agriculture.

The association requires Rs. 594,000 for chili cultivation on their own agricultural land.  Labour will be voluntarily contributed by the beneficiaries. Out of this, Rs. 350,000 will be used to install a permanent drip irrigation system. The harvest is expected after two months, and the profits will be reinvested in replanting and for the welfare of the beneficiaries.

Additionally, the association’s project officers will provide necessary support and chili seedlings to beneficiaries interested in agriculture.

2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வன்னி விழிப்புலனற்றோர் சங்கம், கிளிநொச்சி, போரால் பாதிக்கப்பட்ட குறிப்பாக விழிப்புலன் குறைபாடுடைய 278 வடக்கு கிழக்கு மாகாண பயனாளி குடும்பங்களை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது. இதில் இவர்களது பாடசாலை செல்லும் 200 சிறார்களும் அடங்குவர். இச்சிறார்களில் 3 சிறார்கள் விழிப்புலன் குறைபாடுடையவர்கள்.

இம்மாத செயல் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.  முதலாவது, அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயிற்ச்செய்கை மேற்கொள்ளுதல் ஆகும்.  இரண்டாவது, விவசாயத்தில் நாட்டமுள்ள பயனாளிகளுக்கான மிளகாய் கன்றுகளை வழங்குதல் ஆகும்.  

அமைப்புக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயனாளிகளின் பங்களிப்போடு  அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயிற்ச்செய்கை செய்வதற்கு ரூபா 594,000 தேவைப்படுவதாகவும், இதில் ரூபா 350,000 நிதி நிரந்தரமான சொட்டு நீர்ப்பாசன பொறி முறையினை நிறுவுவதற்காவும் பயன்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அன்னளவாக இரண்டு மாதங்களின் பின் விளைச்சலை எதிர்பார்க்கவும், இதன் இலாபத்தினை மீள் பயிர்செய்கைக்காகவும் பயனாளிகளின் நலன்களுக்காகவும் பயன்படுத்தவுள்ளனர்.

விவசாயத்தில் நாட்டமுள்ள பயனாளிகளுக்கான மிளகாய் கன்றுகளை வழங்கியும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அமைப்பின் திட்ட அலுவலர்கள் மூலம் வழங்கவுள்ளனர்.

Budget
LKR 594,000
Project Status
In Progress