A Toy Making Interactive Session by Subid Ahimsa

Beneficiary
Project Date
2021-07-21
Type of Assistance
-
Description

A Toy Making Interactive Session was held on July 18, 2021 via zoom for children from three Sri Lanka’s Eastern children homes. Subid Ahimsa guided the children through hands-on toy making using used/waste items found at homes. Subid Ahimsa has been engaging children through Ahimsa toy-making for over eleven years and has guided over 700 similar events in Kerala, Tamil Nadu and other places in India. He has also published an English book titled “Ahimsa Toys”. He generously donated his time, and deeply engaged the children with his demonstrations, guidance and conversation.

Children used trashed plastic bottles, bottle caps, old CDs, newspapers, balloons and other commonly used items to create a diverse set of toys. From musical instruments (whistle, musical obe), spinners, balancers, hats to magic fans, children created and played with these toys joyfully. He immersed himself with the children as one of them. Through toys, he shared the message of care for the environment. We are appreciative of Subid Ahimsa facilitating children to make toys, play, work together, laugh and think. Thank you.

This pilot initiative was coordinated with the help of Saranya Sutharshan, assistant commissioner for the Department of Probation and Child Care, Eastern province, probation officers, as well as children's homes’ administrative officers. Thank you for going beyond your work to make the children’s day.

Muthu Venkat, Stalin Baluchamy, Myvizhi Selvi , Gowthami Stalin provided equipment, technical assistance, and enthusiastic support, thank you.

Siva Raj of Cuckoo Movement for Children provided support and inspiration that made this session possible. Thank you.

We hope to continue to coordinate engaging and interactive events for children at care homes.

கடந்த ஞாயிறு மாலை 4 மணியிலிருந்து இரண்டரை மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக இலங்கையிலுள்ள காப்பக சிறுவர்களுக்கு இணைய வழி மூலம் பயன்பாட்டிற்க்கு உதவாதென கருதும் பாவித்த பொருட்களை எவ்வாறு விளையாட்டு பொருட்களாக்கலாம் என்பது பற்றிய செயன்முறை ஒன்றினை சுபீத் அகிம்ஷா நிகழ்த்தினார். சுபீத் அகிம்ஷா அவர்கள் பதினோரு ஆண்டுகளாக சிறுவர்களின் நலன்களுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டுவருவதுடன் எழுநூற்றிக்கதிகமான இவ்வாறான செயல் பகிர்வினை கேரளா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலும் நிகழ்தியுள்ளார். அகிம்ஷா டோய் எனும் ஆங்கில நூலினையும் வெளியிட்டடுள்ளார். எம்பால் கொண்ட நட்பின் அடையாளமாக இதனை தமிழ்நாட்டின் திருவெண்ணாமலையடிவாரத்திலிருந்து இணையவழியாக நிகழ்தினார்.

இந்த பரிட்சாத்த செயல்முறையில் கிழக்கிலங்கையிலுள்ள மூன்று சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்களும் சில சிறுவர் நன்நடத்தை அலுவலர்களும் பங்குபற்றினர்.

மூடி, பலூன், பாவித்த இறுவட்டு, பழைய பத்திரிகை இன்னும் பல பாவித்த பொருட்களை உபயோகித்து, பலவித விளையாட்டு பொருட்களை உருவாக்கி, சிறுவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றி மகிழ்ந்தனர். சுபீத் அகிம்ஷா அவர்கள் சிறுவர்களுடன் ஒருவராகி அவர்களை பங்குபெற வைத்து அனைவரையும் கோவிட்கால வேளையிலும் சிரித்து மகிழ வைத்தார். சோபித்தின் பங்களிப்பை மனதாரா உள்வாங்கி அவருக்கு எம் நன்றிகளை பணிவன்புடன் தெரிவிக்கின்றோம்.

இது செயல்வடிவம் பெற உதவிய கிழங்கிலங்கை சிறுவர் நன்நடத்தை உதவி ஆணையாளர் சரண்யா சுதர்சன், சிறுவர் இல்ல பொறுப்பாளார்கள் மற்றும் நன்நடத்தை அலுவலர்களுக்கும் நன்றிகள்.

இதற்கான தொழிநுட்ப மற்றும் உபகரண உதவிகள் வழங்கிய முத்து வெங்கட், ஸ்டாலின் பாலுசாமி, மைவிழிசெல்வி, கௌதமி ஸ்டாலின் அனைவருக்கும் எம்நெஞ்சாந்த நன்றிகள்.

குக்கூ குழந்தைகள் வெளியின் சிவராஜ் அவர்களின் நட்பும் ஆதரவும் தொடர்ந்தும் பல இவ்வாரான திட்டங்களை ஒன்றிணைந்து செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றி.

தொடர்ந்து இவ்வாறான செயல்முறையினை ஏனைய காப்பக சிறுவர்களுக்கும் வழங்கும் திட்டமுள்ளது.

Budget
Project Status
Completed