Educational Supplies for Three Eastern Homes

Beneficiary
Project Date
2023-03-01
Type of Assistance
Education and Capacity Building - Educational Supplies
Description

இலங்கையின கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று  சிறுவர் காப்பகங்களுக்கான கற்றல் உபகரணங்கள்  மற்றும் இசைக்கருவிகள்

விபுலானந்தா சிறுவர் இல்லம்,  பழுகாகம்,  மட்டக்களப்பு. இந்த எல்லைக்கிராம காப்பகத்தில்  தற்போது 45 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடம் ஒரு சில இசைக்கருவிகள் இருப்பினும் முழுமையான இசைக்கருவித்தொகுப்பு இருப்பின் அனைவரும் இசைக்கூடியதாக இருக்கும். அத்துடன் அவற்றை நாம் வாங்கி வழங்குவதாயின் இவர்களுக்கு இவற்றை பயிற்சி வழங்க இக்காப்பகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதற்காக இரு அன்பர்கள் தங்கள் நேரத்தினை வழங்கவுள்ளனர். ரூபா 250,000

திலகவதியார் மகளிர் இல்லம், கதிரவெளி, மட்டக்களப்பு. இங்கு 40 பெண் பிள்ளைகள் உள்ளனர்.  இவர்கள் தமக்காக கற்றல் உபகரணங்கள் மற்றும்  இசைக்கருவித்தொகுப்பு பெற்றுத்தருமாறு கேட்டுள்ளனர். இங்கு அனைவரும் பாடுவதிலும் இசைக்கருவிகள் வாசிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்காக இசைக்கருவி பயிற்றுவிப்பாளர்களை காப்பகம் கொண்டுள்ளது. ரூபா 300,000

அன்னை சாரதா சிறுவர் இல்லம், திருகோணமலை. தற்போது 27 பெண் பிள்ளைகள் உள்ளனர். மூதூர் பிரதேசத்திலிருந்து இன்னும் சில பெண் பிள்ளைகள் வரும் மாதங்களில் இங்கு வரவுள்ளனர். இவர்கள் பாடசாலைக்குத் தேவையான உபகரணங்கள் தேவையென கேட்டுள்ளனர்.  அத்துடன் 2021ம் ஆண்டு தை மாதம் எம்மால் வழங்கப்பட்ட மூன்று கணினிகளில் பழுதடைந்த ஒன்றினைத் திருத்தவும் உதவிகோரியுள்ளனர். ரூபா 250,000

Budget
Rs 850,000
Project Status
In Progress