2 water heaters, Beds and Chairs for Yogar Swamigal Elders Home -Kilinochchi

Project Date

2019-11-30

Type of Help

basic supplies

Description

2 Water Heaters for bath + Installation
4 Beds / Mattress set
30 Chairs

யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் - கிளிநொச்சி :
கடந்த மாதம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்ல உடனடித்தேவைக்கள் ஆராயப்பட்டு அவற்றில் சிலவற்றை கனடிய அவுஸ்ரேலிய இலண்டன் அன்பர்களின் உதவியுடன் நிவர்த்திசெய்யப்பட்டது.
2019-12-12 வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் யோகர் சுவாமிகள் திருவடிநிலையத்தில் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்துபொருட்களும் கையளிக்கப்பட்டன. இவை இல்லத்தின் உடனடித்தேவைகளை ஆராய்ந்து இரண்டுக்கும்மேற்ப்ட்ட பொருட்கள் விலைகள் பரிசிலிக்கப்பட்டு நேரடியாக வாங்கி கையளிக்கப்பட்டது. அத்துடன் அங்கிருக்கின்ற மற்றய இல்லங்களை தொடர்ந்து ஒருங்கிணைக்கும் எண்ணமாக மற்றய இல்ல தலைவர்களை இவ்வாறன சந்தர்ப்பங்களில் பங்கேற்ற வைத்து அவர்களுக்கிடையிலான ஒரு உறவை ஏற்படுத்த முயல்கிறோம். காந்தி சிறுவர் இல்ல தலைவரும் கிளி இந்துக்கல்லூரி அதிபருமாக திரு கி.விக்னராஜா, திருப்புனித குடும்ப பெண்கள் இல்ல அருட்சகோதரி ஜோலின் அவர்களும் கலந்து மூத்தோருடன் கலந்துரையாடினர். இவை அனைத்தையும் வாங்கி ,இல்ல தலைவர்களை அழைத்துச்சென்று ஒன்றிணைத்து நிகழ்தியவர் திரு குமார் விஜயரத்தினம் .
இந்த நிதியானது தன்னார்வ நண்பர்களால் மாதாந்த சிறு தொகை தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது. மாதம் ஒரு இல்லத்திற்கான உடனடித்தேவகைளை இவ்வாறு நிறைவுசெய்யவுள்ளோம். மனம் உடையோர் தொடர்புகொள்ள. info@letushelpnow.org
இப்பணியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்

Donor

Let Us Help Now

Budget

134,035.00 LKR

Project Status

Completed