Water purification system for Valluwar Illam - Jaffna

Beneficiary
Project Date
2021-05-01
Type of Assistance
-
Description

Valluvar Illam, Vaddukoddai, Jaffna was founded by Balendra in 2002.  Currently, the home is being administered by Mrs. Yalini Balendra.  The home cares for 33 female children and one male child. 

The home used bottled water for drinking because their well water was salty.  LetUsHelpNow provided a water purification system to purify 600 liters of water per day; sufficient for the home's daily use.  Several quotes were obtained and a qualified local vendor was chosen.  The project reduced expenses related to purchasing bottled water, and eliminated the labour involved in procuring and refilling water bottles.  The budget for this project was LKR 124,500.

The funds were donated by 113 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

 

வள்ளுவர் இல்லம், வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம். 2002 ம் ஆண்டு திரு. பாலேந்திரா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு, இப்பொழுது திருமதி யாழினி பாலேந்திரா அவர்களினால் நிர்வகித்து வரப்படுகிறது. இங்கு 33 சிறுமிகளும் ஒர சிறுவனும் தங்கியுள்ளனர்.

இவர்களது கிணற்றுத் தண்ணிர் உப்பாக இருப்பதினால் போத்தல் தண்ணீரை கொள்ளவனவு செய்து அன்றாடம் குடிப்பதற்காக பயன்படுத்தினர். இல்லத்தின் அவசர தேவையாக இருந்த  கிணற்றுத் தண்ணீரை சுத்திகரிக்கும்  இயந்திரங்களை கொள்வனவு செய்வதில் அறம் செய்வோம் அறக்கட்டளை உதவுவது என முடிவுசெய்தது. இதற்காக பல்வேறு விலைகோரல்கள் பெறப்பட்டு இல்ல நிருவாகத்தின் உள்ளீடுகள் பெறப்பட்டு தகுந்த வினியோகத்தர் தெரிவுசெய்யப்பட்டது. இதற்க்கு தேவையாக இருந்த நிதி ரூபா 124,500 இல்லத்தின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
இரண்டு குடிதண்ணீர்  நிலையங்களும், தண்ணீர் தாங்கி கோபுரமும் இத்திட்டத்தினால் நிறுவப்பட்டன. இன்று 600 லீட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீரை, இத்திட்டம் நாளாந்தம் வழங்கும் வல்லமையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் போத்தல்களினால் சூழல் மாசுபடுவது தவிர்க்கப்பட்டும், வேலைப்பழு மற்றும் குடி தண்ணீருக்கான நிதிப் பயன்பாடு குறைக்கப்படும்.

இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா 113 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 124,500.00
Project Status
Completed